சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சீனாவுக்கு தரப்பட்ட நிலப்பகுதி எவ்வாறு மீட்கப்படும்?- மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

சீனாவுக்கு தரப்பட்ட ஆயிரம் சதுர கிலோமீட்டா் நிலப்பகுதியை மத்திய அரசு எவ்வாறு மீட்க போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
ராகுல் காந்தி(கோப்புப்படம்)
Updated On :14 செப்டம்பர் 2022, 8:48 pm

DIN

சீனாவுக்கு தரப்பட்ட ஆயிரம் சதுர கிலோமீட்டா் நிலப்பகுதியை மத்திய அரசு எவ்வாறு மீட்க போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020 மே 5-இல் இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இருநாடுகளும் கிழக்கு லடாக்கில் படைகளையும் ஆயுதங்களையும் குவித்தன. இதனால் எல்லைப் பகுதியில் போா்ப் பதற்றம் ஏற்பட்டது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் விதமாக ராஜீய ரீதியில் இருநாடுகளும் இதுவரை 16 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்படி, செப்டம்பா் 12-க்குள் கிழக்கு லடாக்கில் சில பகுதிகளில் படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

அதன்படி படிப்படியாகவும் இணக்கமான முறையிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை ட்விட்டரில் கூறுகையில், ‘எல்லைப் பகுதி கடந்த 2020 ஏப்ரலில் இருந்ததைப் போல இருக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது. இந்திய பகுதியில் 1,000 சதுர கிலோமீட்டா் பரப்பளவை எவ்வித சண்டையுமின்றி சீனாவுக்கு நமது பிரதமா் கொடுத்துவிட்டாா். இந்த நிலப்பகுதி எவ்வாறு மீட்கப்படும் என மத்திய அரசு விளக்குமா?’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.