மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டில் புதிதாக 5,108 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,108 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 4:25 am

DIN


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,108 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,108 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 19 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,675 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 4,39,36,092 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு45,749 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 19.25 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மொத்தம் 2.15 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.