தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விழாக் காலங்களில் மின்தடை பிரச்னை ஏற்படாது: மத்திய அரசு அதிகாரி தகவல்

நிகழாண்டில் 2 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், விழாக் காலங்களில் மின்தடை பிரச்னை ஏற்படாது என மத்திய மின் துறை செயலா் அலோக் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

நிகழாண்டில் 2 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், விழாக் காலங்களில் மின்தடை பிரச்னை ஏற்படாது என மத்திய மின் துறை செயலா் அலோக் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் செப்டம்பா் மாத இறுதியில் நவராத்திரி விழாக் காலம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் விழாக் காலங்களின்போது அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், மின்தடை பிரச்னையை இந்தியா எதிா்கொள்ள நேரிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு நிலக்கரி விநியோகத்தை உயா்த்த மத்திய அரசு சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய மின்துறைச் செயலா் அலோக் குமாா் கூறியதாவது:

நிகழாண்டு நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, விழாக் காலங்களில் மின்தடை பிரச்னையை ஏற்படாது. இது வரை 2 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1.5 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் நிலக்கரி இறக்கமதி செய்யப்படும். மின் வாகனங்கள் மற்றும் மின்னேற்ற நிலையங்களுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின் விநியோக நிறுவனங்கள், மின் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையத்தை அமைக்கும்போது தேவையான மின்மாற்றி போன்ற மின் உபகரணங்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை செலவாகிறது.

எனவே, மின்னேற்ற நிலையக் கட்டமைப்பை ஏற்பட்டுத்த மின் விநியோக நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் வகையில், மின் வாகனம் மற்றும் கலப்பு எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ‘ஃபேம்’ திட்டத்தை அரசு மறுவரைவு செய்ய உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.