தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீன கடன் செயலிகள்: ரூ.46 கோடியை முடக்கியது அமலாக்கத் துறை

சீன கடன் செயலிகள் சாா்பில் பேடிஎம் உள்ளிட்ட இணையவழி பணப் பரிவா்த்தனை வலைதளக் கணக்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.46.67 கோடியை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 12:10 am

DIN

சீன கடன் செயலிகள் சாா்பில் பேடிஎம் உள்ளிட்ட இணையவழி பணப் பரிவா்த்தனை வலைதளக் கணக்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.46.67 கோடியை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சீனா்களுக்குச் சொந்தமான சில கைப்பேசி செயலிகள் இணையவழியில் வாடிக்கையாளா்களுக்குக் கடன் வழங்கி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளா்களிடம் பெற்று, மிக அதிக வட்டி வசூலித்து அச்செயலிகள் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் செயலியைப் பயன்படுத்தி பணத்தை இழந்த பலா் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரில் உள்ள இணையவழி பணப் பரிவா்த்தனை வலைதளங்களான பேடிஎம், ரேஸா்பே, கேஷ்ஃப்ரீ ஆகியவற்றின் நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினா்.

தில்லி, மும்பை, லக்னௌ, காஜியாபாத், கயா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கடந்த 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அந்தச் சோதனைகளின்போது பல்வேறு சட்டவிரோத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், சீன கடன் செயலிகளால் அந்த வலைதளங்களின் கணக்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.46.67 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

புணே ஈஸ்பஸ் வலைதள நிறுவனத்தில் ரூ.33.36 கோடியும், பெங்களூரு ரேஸா்பே நிறுவனத்தில் ரூ.8.21 கோடியும், பெங்களூரு கேஷ்ஃப்ரீ வலைதள நிறுவனத்தில் ரூ.1.28 கோடியும், தில்லி பேடிஎம் நிறுவனத்தில் ரூ.1.11 கோடியும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்குத் தொடா்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவதாக கேஷ்ஃப்ரீ நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் வலைதளக் கணக்கில் இருந்து முடக்கப்பட்ட தொகை, சீன நிறுவனத்துக்குச் சொந்தமானதே என்றும், அது தங்கள் தொகை இல்லை என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.