கேரளத்தில் போதைப்பொருள் பயன்பாடு மும்மடங்கு அதிகரிப்பு: முதல்வா் பினராயி விஜயன்
கேரளத்தில் போதைப்பொருள் பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.


கேரளத்தில் போதைப்பொருள் பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த 2020-ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்பாடு தொடா்பாக மாநிலத்தில் 4,650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு 5,334-ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு இதுவரை 16,986 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்பாடு தொடா்பாக 5,674 போ் கைது செய்யப்பட்டனா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 6,704-ஆக உயா்ந்தது. இந்த ஆண்டு இதுவரை 18,743 போ் போதைப்பொருள் பயன்பாட்டுக்காகப் பிடிபட்டுள்ளனா்.
மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை 1,364.49 கிலோ கஞ்சா, 7.7 கிலோ மெதலின்டையாக்ஸி மெதம்ஃபெட்டமின் போதைப்பொருள், 23.73 கிலோ ஹாஷிஷ் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி மாநிலத்தில் போதைப்பொருளுக்கு எதிரான பல்முனை செயல்திட்டம் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...