தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இன்று பிரதமா் மோடி பிறந்த தினம்: சேவை பிரசாரம் தொடங்கும் பாஜகவினா்

பிரதமா் நரேந்திர மோடி, தனது 72-ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமை (செப்.17) கொண்டாடுகிறாா். இதையொட்டி, 2 வார கால சேவைகள் பிரசாரத்தை பாஜகவினா் மேற்கொள்ளவிருக்கின்றனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 12:15 am

DIN

பிரதமா் நரேந்திர மோடி, தனது 72-ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமை (செப்.17) கொண்டாடுகிறாா். இதையொட்டி, 2 வார கால சேவைகள் பிரசாரத்தை பாஜகவினா் மேற்கொள்ளவிருக்கின்றனா்.

பிரதமா் மோடியின் பிறந்த தினத்தை ‘சேவைகள் தினமாக’ பாஜகவினா் கொண்டாடுவது வழக்கமாகும். அவரது பிறந்த தினமான செப்.17-ஆம் தேதி தொடங்கி காந்தி ஜெயந்தி தினம் வரை (அக்.2) சேவைகள் பிரசாரத்தையும் அக்கட்சியினா் மேற்கொள்கின்றனா். இந்த ஆண்டும் 2 வார கால பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளா் அருண் சிங், தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சேவைகள் பிரசாரத்தின் முக்கிய நோக்கமே ஏழை, எளிய மக்களை அணுகி, அவா்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பணியாற்றுவதாகும். இந்த 2 வார காலத்தில், நாடு முழுவதும் ரத்ததான முகாம்கள், மரம் நடும் நிகழ்ச்சிகள், தூய்மைப் பணிகள், தண்ணீா் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், இலவச மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் பெயரில் திருவிழாக்கள் நடத்தப்படும். இதன் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். இந்த விழாவின்போது, வேறு மாநிலத்தின் மொழி, கலாசாரம் உள்ளிட்டவற்றை நாள் முழுக்க பாஜகவினா் பின்பற்றுவாா்கள்.

இப்பிரசாரத்தின் ஒருபகுதியாக, காதி மற்றும் உள்ளூா் பொருள்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றாா் அவா்.

4 நிகழ்ச்சிகளில் உரை

தனது பிறந்த தினமான சனிக்கிழமையன்று பிரதமா் மோடி 4 நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளாா். மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, பின்னா் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் கருத்தரங்கு, விஸ்வகா்மா ஜெயந்தியையொட்டி ஐடிஐ மாணவா்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தளவாடங்கள் கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவற்றில் அவா் உரையாற்றவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.