தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குஜராத்: 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை தீா்ப்புகள்

குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 2:14 am

DIN

குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீா்ப்புகள் வெளியாகி உள்ளன.

2002 அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 56 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பளித்தது.

மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொலை வழக்குகளில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன. ஆணவக் கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2021 வரை அதிகபட்சமாக 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. விதிவிலக்காக, கடந்த 2011-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 13 பேரில் 11 போ் 2002, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்குடன் தொடா்புடையவா்கள்.

2021-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து குஜராத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஒருவா் கூறுகையில், ‘அரிதினும் அரிதான வழக்கு எனக் கருதப்படும் வழக்குகளில் மட்டுமே உயா்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறது. பிற தூக்கு தண்டனை வழக்குகளில் தண்டனை குறைப்பு செய்யப்படுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.