
இதுவரை இல்லாத அளவு இந்தியா நிலப்பரப்பு வறட்சிக்குள்ளாகி வருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
தேசிய அறிவியல் நடவடிக்கைகள் அகாடமியின் கீழ் சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழு கடந்த 100 ஆண்டுகள் இந்தியாவில் நிலவிய பருவகால நிலைகளின் தரவுகளைக் கொண்ட ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இந்தியாவில் நிலவிவரும் பருவநிலை மாற்றம் மற்றும் வறட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க | வரதட்சணை, ஆடம்பர திருமணத்துக்குத் தடா: ஜம்மு-காஷ்மீரில் ஒரு கிராமம்
அதன்படி உலகின் ஈரமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியில் நிலவும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஐசோடோப்புகளை பகுப்பாய்வு செய்து பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்மூலம் இந்திய துணைக்கண்டம் கடந்த 150 ஆண்டுகளில் அடிக்கடி வறட்சி மற்றும் பருவநிலை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வறட்சியின் காலப்பகுதியில் இந்திய புவிசார் மாற்றங்களுடன் தொடர்புடையவையாகவும், இவை மனித வாழ்வு மற்றும் வேளாண் துறையில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் உயிரியல் பூங்கா: 70 சதவீத பணிகள் நிறைவு!
இதுதொடர்பாக பேசியுள்ள ஆய்வுக்குழுவின் தலைவர் காயத்ரி கதாயத் இதுபோன்ற நீடித்த வறட்சிகள் எதிர்காலத்தில் நீடித்தால் அவை நவீன சமூகத்தை வெகுவாக பாதிக்கும்” என எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.