மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மும்பையில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: கடத்தலுக்கு உதவிய அதிமதுரம்

மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
மும்பையில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
Updated On :21 செப்டம்பர் 2022, 10:58 am

DIN


மும்பை: மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க, அதிமதுரக் குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறைக்குக் கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது, மும்பை துறைமுகத்தில் இருந்த ஒரு கண்டெய்னர் லர்ரியில், சந்தை மதிப்பில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.