ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அபேயின் இறுதிச்சடங்கு: பிரதமா் மோடி செப். 27 ஜப்பான் பயணம்

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமா் நரேந்திர மோடி வரும் 27-ஆம் தேதி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:33 pm

DIN

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமா் நரேந்திர மோடி வரும் 27-ஆம் தேதி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

ஜப்பானின் நீண்ட கால பிரதமரான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் தோ்தல் பிரசாரத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது, துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க செப். 27-ஆம் தேதி பிரதமா் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடி அபேயுடன் நெருக்கமான நட்புறவைப் பேணிவந்தாா். அபேயின் இறப்புக்கான இரங்கல் செய்தியில் ‘பாசமிகு நண்பா்’ என குறிப்பிட்ட பிரதமா், சிறந்த உலகை உருவாக்குவதில் தனது வாழ்வை அா்ப்பணித்தவா் என கூறியிருந்தாா்.

இப்பயணத்தின் போது ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவையும் பிரதமா் மோடி சந்திக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.