
மத்தியப் பிரதேசத்தில் 24 மாணவர்களுடன் புறப்பட்ட படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் நீச்சல் அடித்து பத்திரமாக கரைக்கு வந்தனர்.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் அனுபூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அனுபூர் மாவட்டத்தின் சோன் ஆற்றில் 20க்கும் அதிகமான மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது தீடிரென படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் நீரில் தத்தளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீச்சல் அடித்து பத்திரமாக கரையை அடைந்தனர். இந்த சம்பவம் இன்று (செப்டம்பர் 22) காலை 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆற்றின் மறுமுனையில் உள்ள கல்வி நிலையத்தை அடைய படகில் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுகையில், பாலம் இல்லாததால் மாணவர்கள் படகினைப் பயன்படுத்தியே ஆற்றின் மறுகரையில் உள்ள கல்வி நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பாலம் அமைத்துத் தர வேண்டி கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.