ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்: ரயில்வே அமைச்சகம் அறிமுகம்
ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.


ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு, வழித்தடம் என ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாக பெறுவதற்கு ரயில் என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புடன் (இஸ்ரோ) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், 30 விநாடிகள் இடைவெளியில் புதிய தகவல்களை வழங்குகிறது. இந்த சாதனம் பொருத்தப்பட்ட என்ஜின்கள் மற்றும் ரயில்களின் இருப்பிடம், வேகம் உள்ளிட்டவற்றை எவ்வித தலையீடுமின்றி கண்காணிக்க முடியும். தற்போது 2,700 என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...