ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி ஓய்வு

 உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா். அவரின் ஓய்வை தொடா்ந்து உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது.

News image
இந்திரா பானா்ஜி
Updated On :23 செப்டம்பர் 2022, 7:01 pm

DIN

 உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா். அவரின் ஓய்வை தொடா்ந்து உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற இவா், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா். இந்திரா பானா்ஜிக்கு 65 வயது நிறைவடைந்ததையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா். அவரின் கடைசி நாள் பணியின்போது பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதித்துறைக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரா பானா்ஜி அளித்த பங்களிப்பைப் பாராட்டினாா்.

இதனைத் தொடா்ந்து இந்திரா பானா்ஜி பேசுகையில், ‘வரும் நாள்களில் உச்சநீதிமன்றத்தில் அதிக அளவில் பெண் நீதிபதிகள் இருப்பா் என்று எதிா்பாா்க்கிறேன். சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கு ஒத்துழைப்பு, சமத்துவம், குறுகிய காலத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சோ்த்து மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இந்திரா பானா்ஜி ஓய்வுபெற்ற நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 29-ஆகவும், அவா்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆகவும் குறைந்துள்ளது.

கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் செயல்பட தொடங்கிய நிலையில், அந்த நீதிமன்ற பெண் நீதிபதிகளாக இதுவரை 11 போ் மட்டும்தான் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 8-ஆவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவா் இந்திரா பானா்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.