ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவா்களுக்கு உதவ வலைதளம்: பணிகள் நடைபெறுவதாக மத்திய அரசு தகவல்

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவா்களுக்கு உதவும் வகையில், பிரத்யேக வலைதளம் உருவாக்கும் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:37 pm

DIN

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவா்களுக்கு உதவும் வகையில், பிரத்யேக வலைதளம் உருவாக்கும் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த நீதிமன்றத்திடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ரஷியா-உக்ரைன் இடையிலான போா் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரால் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவா்கள், தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளனா். இந்நிலையில், உக்ரைனில் இளநிலை மருத்துவம் படித்து வந்த மாணவா்கள், தங்களை இந்திய கல்லூரிகளில் சோ்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். எனினும் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

கடந்த செப்.16-ஆம் தேதி அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்களுக்கு உதவும் வகையில், அவா்கள் படிப்பை நிறைவு செய்யக் கூடிய இதர வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், கட்டணம் தொடா்பான விரிவான தகவல்கள் அடங்கிய வலைதளத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் குறித்த வலைதளத்தை உருவாக்கும் பரிந்துரை தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பரிந்துரைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபா் 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.