தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உத்தரகண்ட்: அங்கிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

உத்தரகண்ட் விடுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் அங்கிதா பந்தாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

News image
உத்தரகண்ட்: அங்கிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
Updated On :28 செப்டம்பர் 2022, 12:50 pm

DIN


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் விடுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் அங்கிதா பந்தாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், மாநில அரசு, அங்கிதாவின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கும். அனைத்து வழிகளிலும் குடும்பத்தினருக்கு உதவும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் நேர்மையான முறையில், துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், காவல்துறையினரும், இந்த விடுதி மற்றும் அங்கு நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி வருகிறார்கள். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.

இதையும் படிக்க.. உங்கள் மகளிடம் இதைக் கேளுங்கள்!

இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையானது எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறும். வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை தர நீதிமன்றத்தை வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.