யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது... எஸ்பிஐ சொல்லும் டிப்ஸ்

யுபிஐ முறையில் அதாவது எண்ம முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 10.62 லட்சம் கோடிக்கு பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்கிறது புள்ளிவிவரம
எஸ்பிஐ சொல்லும் டிப்ஸ்
எஸ்பிஐ சொல்லும் டிப்ஸ்

யுபிஐ முறையில் அதாவது எண்ம முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 10.62 லட்சம் கோடிக்கு பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்கிறது புள்ளிவிவரம்.

பணத்தை கையில் எடுத்துக் கொண்டு திரியாமல், ஏடிஎம் வாசலில் காத்து நிற்காமல், செல்லிடப்பேசி வாயிலாகவே அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளையும் செய்பவரா நீங்கள்? ஆம் எனில், நிச்சயமாக சில விஷயங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

பணம் கையில் இருப்பதைவிடவும் இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் சில வகைகளில் மோசமான விஷயமாக மாறியிருக்கிறது. ஆனால்,  இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க எஸ்பிஐ வங்கி சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

பணத்தை ஒருவரிடம் இருந்து பெறும் போது யுபிஐ பின் பயன்படுத்த வேண்டியிருக்காது. 

ஒருவேளை, பணம் செலுத்த வேண்டும் உங்கள் பின் எண் கொடுங்கள் என்று யாராவது கேட்டால், அந்த அழைப்பை துண்டித்துவிடுங்கள். நீங்கள் பணப்பரிமாற்றம் செய்ய மட்டுமே பின் எண் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ, அந்த நபரை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். 

தெரியாதவர்களிடமிருந்து வரும் பணம் செலுத்தும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

ஏடிஎம் பின் அல்லது சிவிவி எண் கேட்டு வரும் அனைத்து அழைப்புகளுமே மோசடி அழைப்புகள் என்பதை உணருங்கள்.

ஒரு கடையில் பொருள்களை வாங்கிவிட்டு பணத்தை செலுத்தும் போது அங்கிருக்கும் க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்ததும் பணம் செலுத்தத் தொடங்கிவிடாதீர்கள். அதற்கு மேல் வரும் அந்த நபரின் பெயர் அல்லது கடையின் பெயரை அவர்களிடம் சொல்லி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்படி ஏடிஎம் பின், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் போன்றவற்றை பாதுகாக்கிறோமோ, அடிக்கடி மாற்றிவிடுகிறோமோ அது போல அடிக்கடி மாற்றுங்கள். இது உங்கள் பாதுகாப்புக்காக என்று பல பயனுள்ள தகவல்களை எஸ்பிஐ நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com