காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தேசிய விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார் மோடி

36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 3:54 pm

DIN

36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் இன்றுமுதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள மோடி, விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார். இந்த நிகழ்வில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டிகளை துவக்கிவைத்த மோடி பேசுகையில், “உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு நடைபெறுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு 100 சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்திய தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஆனால், தற்போது 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.