4 மாநிலங்களில் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

நாட்டில் 4 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 
4 மாநிலங்களில் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

நாட்டில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான  வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com