நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது: விலைவாசி குறித்து நிர்மலா சீதாராமன் உரை

பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டவை குறித்த விவாதத்தில் மக்களவையில் பதிளித்து நிர்மலா சீதாராமன் பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இரண்டாவது அதிகபட்ச வருவாய் ஜூலை மாதத்தில் கிடைத்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.1.49 லட்சம் கோடி கிடைத்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. 

இந்தியாவில் பணவீக்கம் 7 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கரோனா அலை, ஒமைக்ரான், உக்ரைன் போர் உள்ளிட்ட சூழல்களை தாண்டி பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. மிகப்பெரிய உற்பத்தி மையமான சீனாவும் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரகுராம் ராஜன் பாராட்டியுள்ளார். இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளை இந்தியாவுடன் பொருத்தி நாட்டை அவமதிக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com