கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி

கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். 
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். 

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதை அடுத்து நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு 4 ஆக இருந்த நிலையில் கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 'ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த மலப்புரத்தைச் சேர்ந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். கடந்த ஜூலை 27 ஆம் தேதி அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கோழிக்கோடு வந்துள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது' என்று தெரிவித்தார். 

இதையடுத்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தில் மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தில்லியில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுதவிர கேரளத்தில் உயிரிழந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com