அள்ள அள்ள பணம்: பார்த்தா, அர்பிதாவிடமிருந்து உண்மையை வரவழைக்க புதிய திட்டம்

பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியிடமிருந்து உண்மையை வரவழைக்க, இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை.
அள்ள அள்ள பணம்: பார்த்தா, அர்பிதாவிடமிருந்து உண்மையை வரவழைக்க புதிய திட்டம்
அள்ள அள்ள பணம்: பார்த்தா, அர்பிதாவிடமிருந்து உண்மையை வரவழைக்க புதிய திட்டம்


கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியிடமிருந்து உண்மையை வரவழைக்க, இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை.

பணம் தனதில்லை, பார்த்தாவினுடையது என்று அர்பிதாவும், காலம் வரும் போது தெரிய வரும் என்று பார்த்தாவும் விசாரணையின்போது கூறிவந்த நிலையில் இருவரையும் ஒன்றாக அமர வைத்து, அமலாக்கத் துறையின் கேள்விகளை இருவரும் எதிர்கொள்ள வைத்து உண்மைகளைக் கண்டறிய அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் என்ன பதில் கிடைத்திருக்கிறது என்பது இதுவரை வெளியாகவில்லை.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், தனக்குச் சொந்தமான இரண்டு குடியிருப்புகளிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.50 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று அமலாக்கத் துறை விசாரணையில் கூறியிருந்தார் அர்பிதா. 

மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறையிடம், அர்பிதா கூறியதாவது, இந்த அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் எனது வீட்டில் இருப்பது எனக்குத் தெரியவே தெரியாது. அந்த அறைகளை பார்த்தா சட்டர்ஜி எப்போதும் பூட்டியே வைத்திருப்பார். அதற்குள் நுழைய என்னை அனுமதித்ததே இல்லை என்றும் அர்பிதா கூறியிருந்தார். 

விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், பார்த்தா, அர்பிதாவின் கூட்டணி வெறும் பணம், தங்க நகைகள், குடியிருப்புகள், சொத்துக்களுடன் நின்றுவிடவில்லை. அதற்கும் மேல் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அர்பிதா பெயரில் மட்டும் 31 வாழ்நாள் காப்பீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக்குமே பாதுகாவலர் பெயராக பார்த்தாவின் பெயர்தான் உள்ளது என்கிறார்கள்.

கொல்கத்தாவின் பெல்காரியா குடியிருப்பில் அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான குடியிருப்பில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் புதன்கிழமை 28 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காக வங்கி அதிகாரிகள் நோட்டு எண்ணும் இயந்திரத்துடன் அா்பிதா முகா்ஜி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனா். ரூபாய் நோட்டுகளுடன் இரண்டு டைரிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அது மட்டுமல்லாமல் 5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் அமலாக்கத் துறையினர் மதிப்பிடுவதற்காக குவித்து வைத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.21 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கைப்பற்றிய நிலையில், மற்றொரு வீட்டிலிருந்து புதன்கிழமை இந்தளவுக்கு ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர்.

பணம், நகைகளைத் தாண்டி ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்தையும் அமலாக்கத் துறையினர் பத்து இரும்பு பெட்டகங்களில் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், வீட்டிலிருந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்ததாகவும், அலி பாபா குகைப் போல தோன்றியதாகவும் கூறியிருந்தார்கள்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

அதன்பிறகு சோதனை நடந்த வீட்டின் பூட்டை, குடியிருப்பின் நலச் சங்க செயலாளர்கள் முன்னிலையில், உடைத்த அமலாக்கத் துறையினர், பல அலமாரிகள், பீரோக்களிலிருந்து இந்த பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறார்கள்.

சாட்டர்ஜி மற்றும் முகர்ஜியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாள்களிலும் நான்கு வெவ்வேறு முகவரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com