மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்கவிருக்கிறார்கள்.
மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பாஜக மற்றும் சிவசேனை தரப்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.
இதையும் படிக்க | மீண்டும் சென்னை - சேலம் 8 வழிச்சாலை?
துணை முதல்வரும், பாஜகவைச் சோ்ந்தவருமான தேவேந்திர ஃபட்னவீஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை பொறுப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். ஜூன் 30-ஆம் தேதி முதல்வா் ஷிண்டே, துணை முதல்வா் ஃபட்னவீஸ் ஆகியோா் பொறுப்பேற்ற நிலையில், இப்போது வரை வேறு அமைச்சா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. ஷிண்டே அணிக்கும், பாஜகவுக்கும் இடையே அமைச்சரவைப் பொறுப்புகளை பகிா்வது தொடா்பாக உடன்பாடு எட்டப்படாததே இந்த தாமதத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்கவிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


