அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ளன.
குஜராத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் பால் விலையை உயாத்தியுள்ளது.
டோன்டு பால் ரூ. 51 ஆகவும் டபுள் டோன்டு பால் ரூ. 45 ஆகவும் பசும்பால் ரூ. 53 ஆகவும் அதிகரித்துள்ளது. டோக்கன் பாலின் விலை ரூ. 46 லிருந்து ரூ. 48 ஆக அதிகரித்துள்ளது.
500 மில்லி அமுல் கோல்ட் பால் இனி ரூ.35-க்கும், அமுல் தாசா ரூ.25-க்கும், அமுல் சக்தி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
நாளை(புதன்கிழமை) முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதர் டெய்ரி ஃபுல் க்ரீம் பால் விலை ரூ.61 ஆகவும் டோன்டு பால் ஒரு லிட்டர் ரூ.51 ஆகவும் டபுள் டோண்ட் பால் ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


