தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தனியார்மயமாக்கல் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றது. அதன் ஒருபகுதியாக அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரியுள்ளது.

சனிக்கிழமை தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் ரிசர்வ வங்கி வெளியிட்ட மாதந்திர அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய சுப்ரியா, “நாட்டில் 27ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக சுருங்கியுள்ளது. இருந்தும் எஞ்சிய பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. மோடி அரசு ரிசர்வ் வங்கியை ரிவர்ஸ் (திரும்புதல்) வங்கியாக மாற்றி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com