குஜராத் செல்லும் தில்லி துணை முதல்வர், காரணம் என்ன தெரியுமா?

 தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் அடுத்த வாரம் குஜராத் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் செல்லும் தில்லி துணை முதல்வர், காரணம் என்ன தெரியுமா?

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் அடுத்த வாரம் குஜராத் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தில்லி முதல்வர் மற்றும் துணை முதல்வரின் இந்த குஜராத் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் இலவசமாக தரமான கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளோடு இருவரும் குஜராத் செல்ல உள்ளனர்.

இந்தப் பயணம் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: “ நானும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் இரண்டு நாள்கள் பயணமாக குஜராத் செல்ல உள்ளோம். இந்தப் பயணத்தின்போது குஜராத் மக்களுக்கு தரமான கல்வி மற்றும் மருத்துவம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என உறுதியளிக்க உள்ளோம். நாங்கள் தில்லியில் இருப்பதைப் போல தரமான பள்ளிக் கூடங்கள், தரமான மருத்துவமனைகள் ஆகியவற்றை குஜராத்திலும் உருவாக்குவோம். அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் தரமான முறையில் வழங்கப்படும். இதன்மூலம் மக்கள் பெரிதும் பயனடைவர். குஜராத் மாநிலத்தின் இளைஞர்களிடமும் நாங்கள் பேச உள்ளோம்.” என்றார்.

 தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் நேற்று (ஆகஸ்ட் 19) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அரவிந்த கேஜரிவாலின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 14 மணி நேரத்திற்கும் மேலாக சிசோடியாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது. தில்லி துணை முதல்வரின் இல்லத்தில் நடைபெறும் இந்த சோதனை குறித்து ஆம் ஆத்மியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். துணை முதல்வருக்கு எதிரான இந்த சோதனை பாஜகவால் நடத்தப்படும் திட்டமிட்ட செயலாகும் எனவும் தாக்கிப் பேசினர். ஆம் ஆத்மியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சிபிஐ போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி ஆம் ஆத்மியின் அமைச்சர்களை அச்சுறுத்த நினைப்பதாகவும் தாக்கிப் பேசியுள்ளனர். 

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு ஆம் ஆத்மி தனது ஆட்சியினை இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டு குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com