புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தில்லி விவசாயிகள் இன்று போராட்டம்: எல்லைகளில் காவல்துறையினர் குவிப்பு

தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

News image
தில்லியில் விவசாயிகள் போராட்டம்(கோப்புப்படம்)
Updated On :22 ஆகஸ்ட் 2022, 5:59 am

DIN

தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

இதையடுத்து தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 

இதன் காரணமாக தில்லி ஜந்தர் மந்தர் பகுதி மற்றும் தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தில்லி எல்லைகளில் தடுப்புகளை வைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லை, சிங்கு எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.