
சொமோட்டோ விநியோக பணியாளரை ஒரு பெண் காலணியால் அடிக்கும் விடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சோமோட்டோ நிறுவனம் இதைப்பற்றி விசாரிப்பதாக சொல்லியிருக்கிறது.
ஒரு பெண் சோமோட்டோ விநியோக பணியாளரை காலணியால் பலமுறை அடிக்கும் விடியோ வைரலானது. இந்த விடியோ ஆக.16 ஆம் நாள் எடுக்கப்பட்டது. ஆனால் எங்கு எடுக்கப்பட்டது என விடியோவை பதிவிட்டவர் தகவல் சொல்லவில்லை.
எனக்கு ஆர்டர் வேண்டாம். அவர் அடிவாங்குகிறாரே அங்கே போய் கேட்கலாமே என விற்பனை செய்ய வந்த மற்றொரு பிரதிநிதியிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவரும் அதே வேலை செய்வதால் அவனுக்கு உதவி செய்கிறாயா எனக் கேட்பார்களே எனத் தயங்கி, பிறகு அவன் அவர்களிடம் பேசினான். அவர்களுக்கு கன்னடம் புரியவில்லை. அவனது வேலை பறிபோய்விடும் என பயந்து நடுங்கினான். எனக்கு பக்கதில் இருந்த ஒருவர் இந்த விடியோவை எடுத்தார்.
பிரச்சனை என்னவெனில் அந்த ஆர்டர் வேறு ஒருவருக்கு அனுப்பப்பட்டது என விநியோக பணியாளர் சொல்லியிருக்கிறார். இல்லை தனக்குதான் என அந்தப் பெண் வாக்குவதத்தில் ஈடுபட்டு காலணியால் அடித்துள்ளார். இந்த வைரல் விடியோவுக்கு சோமோட்டோ பதிலளித்துள்ளது. நாங்கள் இதை பரிசோதித்து கொண்டுள்ளோம். அந்த விற்பனை பிரதிதியை தொடர்பு கொள்வோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொருவருக்கு வந்த ஆர்டருக்கு இப்படியா செய்வது? இந்த மாதிரி செய்கைகளை அனுமதிக்கக்கூடாது. சொமோட்டோ அந்த பெண்ணின் மீது வழக்கு பதிய வேண்டுமென பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Hi @zomatocare @zomato, the delivery executive got assaulted while delivering my order (#4267443050). Some woman took the order from him and started hitting him with her footwear. He came to my place crying and terrified that he would lose his job. pic.twitter.com/8VQIaKVebz
— dj (@bogas04) August 15, 2022