நல்ல பாம்பு கொத்தியது: வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம்

கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ் ராஜநாகம் கொத்தியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நல்ல பாம்பு கொத்தியது: வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம்

கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ் நல்லபாம்பு கொத்தியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், கேரளத்தில் தனி ஒரு மனிதராக  குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும் மேற்பட்ட  பாம்புகளை மீட்டு வனத்தில் விடுபவராக இருப்பவர் வாவா சுரேஷ்.

இவர், நேற்று(ஜன.31) மாலை கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள குரிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்த நல்லபாம்பை மீட்கச் சென்றார். சில நிமிடங்களில் பாம்பைப் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் அதை பையில் போட முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக சுரேஷின் தொடைப் பகுதியில்பாம்பு கொத்தியது.

இதனால், உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின், அவரை முதல்கட்ட சிகிச்சைக்குப் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர். 

இந்நிலையில், இன்று காலை வரை கவலைக்கிடமான நிலையில் இருந்த வாவா சுரேஷின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையில் வாவா சுரேஷ்
சிகிச்சையில் வாவா சுரேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com