மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நாட்டில் இதுவரை 175.03 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 175.03 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 பிப்ரவரி 2022, 6:18 am

DIN

நாட்டில் இதுவரை 175.03 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 1,98,09,200 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 36,28,578 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,75,03,86,834 (175.03 கோடி) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்

Story image

கடந்த 24 மணி நேரத்தில் 66,254 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 4,20,37,536 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம் 98.21 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 75,81,27,480 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,35,471 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.