
கோப்புப் படம்
மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனாவின் உருமாறிய தொற்று வகையான ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து, தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த முறை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
IMPORTANT ANNOUNCEMENT by #DoPT:
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) January 3, 2022
Keeping in view the rise in #COVID cases in the last few days, the BIOMETRIC ATTENDANCE for govt officials and employees is being suspended with immediate effect, till further orders.
Under leadership of PM Sh @NarendraModi, this
1/2