கடைசி 50 நாள்கள்: சிபிஎஸ்இ மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறவிருக்கிறது.
'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'
'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'


புது தில்லி: சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறவிருக்கிறது.

எந்த முறையில் இந்த இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும் என்பது முதல், தேர்வினை எப்படி எதிர்கொள்வது? ஏற்கனவே எழுயித முதல் பருவத் தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது வரை பல்வேறு குழப்பங்களுடன் படித்து வருகிறார்கள் மாணவர்கள்.

ஏற்கனவே, இவ்விரு பாடத்திட்டங்களில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

எனவே, இந்த மாதிரி வினைத்தாள்களை வைத்துக் கொண்டு, சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ மாணவர்கள் தங்களது இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள்.

இதுவரை தேர்வுக்குத் தயாராகாத மாணவர்களும் கூட வினா வங்கி மற்றும் மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு உடனடியாக தேர்வுக்குத் தயாராகும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு கடைகளிலும் கூட, வினா வங்கிகள் கிடைக்கின்றன. அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் சரியாக பயின்றுவருகின்றோமா என்பதை மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு தெரிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் சரியாக 50 அல்லது 60 நாள்கள்தான் இருக்கின்றன. எனவே, சரியான திட்டமிடல் அவசியம்.

இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். இப்போது என்ன செய்தால் நல்ல மதிப்பெண் பெறலாம். முழு மதிப்பெண்களைப் பெற என்ன செய்யலாம் என்று கல்வியாளர்கள் அளிக்கும் டிப்ஸ் இதோ..

1. பாடங்களைப் பிரிக்கலாம்
பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்கள் சரியான புரிதல் கொண்டிருக்க வேண்டும். பாடத்திட்டங்களை மாணவர்கள் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பாடத்திட்டத்தை இணையதளத்திலிருந்து கூட பதிவிறக்கம் செய்து, அதனை எப்போது எதைப் படிப்பது என்று பிரித்து நேரம் அல்லது தேதி குறித்து வைத்துக் கொள்ளலாம்.

2. வினா வங்கி
ஒவ்வொரு பாடத்தையும் படித்ததுமே, மாணவர்கள் அதிலிருக்கும் முக்கிய வினாக்களை வினா வங்கி மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சரியான முறையில் படித்திருக்கிறோமா என்பதை அதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

3. மாதிரி வினாத்தாள்
மாணவர்கள் தொடர்ந்து மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உரிய நேரத்துக்குள் ஒரு வினாத்தாளை முடிக்க முடிகிறதா என்பதற்கும், உரிய நேரத்துக்குள் முடிக்கவும் இந்த பயிற்சி நிச்சயம் உதவும்.

4. உடல் நலன்
படிப்பதுடன் உடல் நலனும் மிகவும் முக்கியம். சிலர் படிக்கிறேன் பேர்வழி என்று இரவு கண்விழித்தல், தண்ணீர் அருந்தாமல் இருத்தல், உணவை குறைத்தல் போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். அதனை நிச்சயம் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.

மிக விரைவில் இரண்டாம் பருவத் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்படும். எனவே, பாடத்தை புத்தகத்தில் படிப்பதுடன், மாதிரி வினாத்தாள் மற்றும் வினா வங்கியின் உதவியோடு பயிற்சிகளை மேற்கொள்வது மிக மிக அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com