பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: காரணம்?

கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:11 pm IST

கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் மணிக்குட்டன், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது அத்தை ஆகியோர் இறந்து கிடந்தனர். 

மணிக்குட்டன் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மற்ற நால்வரும் விஷம் குடித்துள்ளனர். 

கடன் தொல்லையால் மணிக்கூட்டன் மன உளைச்சலில் இருந்ததாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது வீட்டிற்கு அருகில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் சமீபத்தில் சொந்த வீடு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். 

இரண்டு நாள்களுக்கு முன்பு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவகத்தை ஆய்வுசெய்து மணிக்கூட்டனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதைத் தொடர்ந்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

சனிக்கிழமை தனது உணவகத்தைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணிக்குட்டன் செய்த நிலையில், இன்று காலை தனது வீட்டிற்கு வந்த உணவக ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைக் கண்டு அதிர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் 5 பேரின் சடலங்களையும் மீட்டு, மேலும் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.