மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் அடுத்த வாரம் விசாரணை

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :4 ஜூலை 2022, 5:52 am

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.