குடியரசுத் தலைவர் தேர்தல்: கோவா எம்.எல்.ஏ-க்களை சென்னைக்கு அனுப்பிய காங்கிரஸ்

குடியரசுத் தலைவர் தேர்தல்: கோவா எம்.எல்.ஏ-க்களை சென்னைக்கு அனுப்பிய காங்கிரஸ்

நாளை மறுநாள் குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கோவாவில் உள்ள தனது 5 எம்.எல்.ஏ-க்களை சென்னைக்கு அனுப்பியுள்ளது. 

நாளை மறுநாள் குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கோவாவில் உள்ள தனது 5 எம்.எல்.ஏ-க்களை சென்னைக்கு அனுப்பியுள்ளது.

சங்கல்ப் அமோங்கர், யுரி அலிமோ, அல்டோன் டி காஸ்டோ, ருடால்ஃப் ஃபெர்னாண்டஸ் மற்றும் அல்வேரஸ் பெரைரா ஆகிய காங்கிரஸைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய (ஜூலை 16) சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்தவுடன் உடனடியாக அவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தலில் நேரடியாக கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் சட்டப்பேரவைத் தொடர் கடந்த ஜூலை 11 முதல் தொடங்கியது. இந்த சட்டப்பேரவைத் தொடர் அடுத்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்குக்கு அழைத்துச் செல்லப்படும் குழுவில் இல்லை. காங்கிரஸினைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் எதற்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து பேசிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மைக்கல் லோபோ கூறியதாவது: “அவர்கள் ஏன் சென்னை அழைத்து செல்லப்பட்ருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. என்னை அவர்கள் யாரும் அழைக்கவில்லை. அவர்கள் ஏன் சென்னை சென்றிருக்கிறார்கள் என எனக்குத் தெரியாது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com