நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் போராட்டம்

விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் போராட்டம்

விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் இரண்டு நாள்களில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது.

இந்நிலையில், மூன்றாம் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ள இந்த போராட்டத்தில், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும், அத்தியாவசியப் பொருள்களை கையில் ஏந்தியும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவொரு போராட்டமும் நடத்தக் கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com