பாஜக எம்.பி.க்களின் முழக்கத்தால் முடங்கியது நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாஜக எம்.பி.க்களின் முழக்கத்தால் முடங்கியது நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலைமுதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில், ஆதிர் ரஞ்சனின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனர்.

மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிய நிலையில், பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அவையில் பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் செளத்ரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com