மும்பையில் நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத ஹிந்தி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்திரகூட் படப்பிடிப்பு தளத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இரவு 10.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீ விபத்தினால் படப்பிடிப்பு தளம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர், ஷ்ரத்தா இருவரும் ஸ்பெயினில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில தினங்களுக்கு முன்னர்தான் மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அதிர்ச்சி அளிக்கும் அரசியல் 'சென்டிமென்ட்'!
வாழ்வாதார கோரிக்கை தென்பெண்ணை - பாலாறு இணைப்பு

அக்னி மலையில் துளிா்விடாத இரட்டை இலை

கால் நூற்றாண்டாக கிடப்பிலுள்ள நான்குனேரி தனிக் கால்வாய் திட்டம்!
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

