
நாட்டில் கரோனா தொற்று உச்சமடைந்து வருவது இயல்பானவை, ஆனால் முகக்கவசம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் திங்களன்று புதிதாக 8,084 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து 3-வது நாளாக 8000-ஐ கடந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 47,995 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,24,771 ஆக உள்ளது.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி,
சமீபத்திய கரோனா எழுச்சி ஒமைக்ரான் மாறுபாடு ஆகும். பெரும்பாலான வழக்குகள் குறைவான தீவிரத்தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.
ஒமைக்ரான் வகை மாறுபாடு காரணமாக அதிகரித்துவரும் கரோனாவாக இருக்கலாம். இது சுவாசக்குழாய் நோய்த் தொற்றுகளை பெரும்பாலும் ஏற்படுத்துவதால், அதைப் பற்றி பீதி அடையத் தேவையில்லை என்று எய்ம்ஸின் சமூக மருத்துவ மையத்தின் இணைப் பேராசிரியர் மருத்துவர் ஹர்ஷல் ஆல் சால்வே தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் தொற்று பதிவாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதத்திற்குப் பின் இது அதிகரித்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தில் 16,370 மற்றும் 15,363 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க: திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு
கர்நாடகம் (3,651), தில்லி (2,442), ஹரியாணா (1,617), தமிழ்நாடு (1,332), உத்தரப் பிரதேசம் (1,212) மற்றும் தெலங்கானா (1,039) ஆகிய மாநிலங்கள் 1,000-ஐத் தாண்டிய மாநிலங்களாகும்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியத்தை சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும், தற்போதைய கரோனா அலை அதிகம் பரவக்கூடியது என்றாலும், தீவிரத்தன்மை குறைவாக உள்ளது.
பெரும்பான்மையானவர்கள் ஒருவருடத்திற்கு முன்பு தடுப்பூசி போடப்பட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்ற உண்மையைப் புறக்கணிப்பது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.