
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,32,57,730-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 58,215 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,803 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து 7,624 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,26,74,712-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,95,67,37,014 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 15,21,942 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்து வருவது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்