அக்னிபத் திட்டம்: குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங். எம்.பி.க்கள் பேரணி

தில்லி விஜய் சவுக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.
அக்னிபத் திட்டம்: குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங். எம்.பி.க்கள் பேரணி


தில்லி விஜய் சவுக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

ராணுவத்துக்கு ஆள் எடுக்க அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய எம்.பி.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சல்மான் குர்ஷித், கே சுரேஷ், வி நாராயணசாமி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “அக்னிபத் திட்டம் மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்”.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com