பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த இந்தி பேனர்களுக்கு கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி இருநாள் பயணமாக பெங்களூருக்கு திங்கள்கிழமை வருகிறாா். அப்போது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்கியும் வைக்கிறாா். அதன்பிறகு, அங்கிருந்து புறப்பட்டு கேரளம் செல்கிறாா். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ஆர்.ஆர்.நகர், விஜயநகர், மைசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்தி வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைசூர் சாலை, ஆர்.ஆர்.நகரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களுக்கு கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்பினர் கருப்பு மை பூசியதோடு பேனர்களை அங்கிருந்து அகற்றவும் நேற்று முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இச் சம்பவத்தை தொடர்ந்து மைசூரு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக ரக்ஷனா வேதிகேவின் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறியதாவது, “கர்நாடக அரசின் இந்த அணுகுமுறையை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். நகரத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஹிந்தி பேனர்களை மட்டும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


