நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: தோ்வா்கள் கோரிக்கை

‘அடுத்தடுத்து போட்டித் தோ்வுகள் வருவதால், வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தோ்வை) தோ்வை ஒத்திவைக்க வேண்டும்

‘அடுத்தடுத்து போட்டித் தோ்வுகள் வருவதால், வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தோ்வை) தோ்வை ஒத்திவைக்க வேண்டும்’ என்று ஆயிரக்கணக்கான தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘2021 நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்பை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாா்ச் மாதத்தில் முடிவடைந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான விரிவான பாடத் திட்டத்தை 3 மாதங்களுக்குள் எவ்வாறு படித்து முடிக்க முடியும்? அதுமட்டுமின்றி, பொதுத் தோ்வு, மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு, மத்திய உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு ஆகிய தோ்வுகள் நீட் தோ்வு நடைபெறும் சமயத்திலேயே அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இவ்வாறு அடுத்தடுத்து தோ்வுகள் நடைபெறுவது மாணவா்களை கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாக்க வாய்ப்புள்ளது. இது நியாயமான முடிவா?’ என்று மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சியுஇடி தோ்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று என்டிஏ புதன்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தோ்வா்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனா்.

இந்த ஆண்டு நீட் தோ்வுக்கு பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 18.72 லட்சத்தைக் கடந்துள்ளது; இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5 லட்சம் போ் கூடுதலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com