
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மனி சென்றடைந்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா். இதற்காக அவர் சனிக்கிழமை புறப்பட்டு இன்று ஜெர்மனி சென்றடைந்தார்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 11,739 பேருக்கு கரோனா
அவர் அதிகாலை மியூனிக் நகரைச் சென்றடைந்ததாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மியூனிக் நகரில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுடன் விடுதியில் வரவேற்பு அளித்தனர். அங்கு வந்திருந்த குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மியூனிக் நகரில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றவும் உள்ளார். இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருப்பதாக அங்கிருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.