ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

கோபன்ஹேகனில் பிரதமர் நரேந்திர மோடி ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிரை புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புது தில்லி: கோபன்ஹேகனில் பிரதமர் நரேந்திர மோடி ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிரை புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.


குறிப்பாக புவிவெப்ப ஆற்றல், நீலப் பொருளாதாரம், மீன்வளம், உணவு பதப்படுத்துதல், டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து மோடியும், ஜாகோப்ஸ்டோட்டிரும் விவாதித்தனர்.

பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஜாகோப்ஸ்டோட்டிரின் தனிப்பட்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார். இதில்   இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்து ஐஸ்லாந்து பிரதமருக்கு விளக்கினார்.


நேற்று, இந்தியா-டென்மார்க் பசுமை வியூகக் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com