அக்.2-ல் கன்னியாகுமரி-காஷ்மீர் வரை பேரணி: சோனியா காந்தி

அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி தொடங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
அக்.2-ல் கன்னியாகுமரி-காஷ்மீர் வரை பேரணி: சோனியா காந்தி

அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி தொடங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்தப்படும். இளைஞர்கள் உள்பட அனைவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும். சமூக, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் உயிர்நாடியை காக்கும் வகையிலும் பேரணி நடத்தப்பட உள்ளது. 

ராகுல் காந்தி பேசுகையில், மக்களுக்கும், காங்கிரஸிக்கும் இடையேயான தொடர்பு உடைந்து விட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும். நாம் மீண்டும் மக்களை சந்திக்க செல்ல வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். காங்கிரஸிக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com