

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 19 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,260 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் கோதுமை கையிருப்பு மேலும் வீழ்ச்சியடையலாம்
நேற்று ஒரேநாளில் 2,467 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,84,710 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 16,400 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 191.48 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,76,005 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.