மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

'நான் பாஜகவில் இல்லை; அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை' - ஹார்திக் படேல்

நான் பாஜகவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹார்திக் படேல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :19 மே 2022, 7:15 am

DIN

நான் பாஜகவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹார்திக் படேல் தெரிவித்துள்ளார். 

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் இன்று தைரியமாக ராஜிநாமா செய்திருக்கிறேன். என்னுடைய முடிவை காங்கிரஸ் கட்சியினரும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது என்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இம்மாத தொடக்கத்திலேயே ட்விட்டர் பக்கத்தில் 'குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்' பதவியையும் 'கை' சின்னத்தையும் நீக்கியிருந்தார். 

இதனிடையே, அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

இதற்கு பதில் அளித்துள்ள ஹார்திக் படேல், 'நான் பாஜகவில் இன்னும் சேரவில்லை. பாஜகவில் சேர்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹார்திக் படேல் ராஜிநாமா செய்துள்ளது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.