ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார் அட்டை தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் தனியார் நிறுவனங்களில் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை


ஆதார் அட்டை தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் தனியார் நிறுவனங்களில் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"உரிமம் இல்லாத விடுதிகள் அல்லது திரையரங்குகள் போன்ற தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டை தகவல்களை வாங்கவோ, அதன் நகல்களை எடுக்கவோ அனுமதி கிடையாது. ஆதார் சட்டம் 2016-இன் படி அது குற்றம். ஆதார் அட்டையைப் பார்க்க வேண்டும் அல்லது அதன் நகல் வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கோரினால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்த உரிய பயனாளர் உரிமம் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

ஆதார் அட்டை நகலை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, பயனாளர்கள் கடைசி 4 எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பொது இடங்களில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பதிவிறக்கம் செய்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை கணினியிலிருந்து முற்றிலுமாக அழித்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும்."

ஆதார் அட்டையின் கடைசி 4 எண்களை மட்டுமே காண்பிக்கும் வகையிலான ஆதார் அட்டையை https://myaadhaar.uidai.gov.in/ இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com