புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடிய மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் சி.ஆா்.பி.எஃப். வீரா்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக தனது முகநூல் பக்கத்தில் விமா்சனம் செய்திருந்த அப்போது 19 வயதுடைய கல்லூரி மாணவரான ஃபையஸ் ரஷீத், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153ஏ இன்படி (மத அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவிப்பது), 201 (ஆதாரங்களை சிதைப்பது) ஆகியவற்றின் கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.கங்காதா் தீா்ப்பு வழங்கினாா்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபையஸ் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சட்டப் பிரிவு 153ஏ இன்கீழ் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம், பிரிவு 201 இன்கீழ் 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவு 13 இன்படி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடும் வகையில் முகநூல் பக்கத்தில் 23 கருத்துகளை பதிவிட்ட ஃபையஸ் ரஷீத், இந்திய ராணுவ வீரா்கள் மீதான தாக்குதலைக் கொண்டாடியதோடு, ராணுவ வீரா்களை இழிவுபடுத்தியிருந்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்தாா். இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கத்தோடு அவரது கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது 22 வயதாகும் பையஸ் ரஷீத் மேலும் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரவசம் ஏற்படுத்திய ரயில் கண்காட்சி

தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள்; குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் கூறுவதென்ன?

தனுஷ் - 55: காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி?

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK | Congress
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

