தில்லி கொலை: ஷ்ரத்தாவின் புகாரில் காவல் துறை துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டுமா?

தில்லியில் காதலானால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஷ்ரத்தா வால்கர் கடந்த 2020ஆம் ஆண்டு கொடுத்த புகாரினை காவல் துறை இன்னும் அதிக கவனம் கொடுத்து விசாரித்திருக்க வேண்டும்.
தில்லி கொலை: ஷ்ரத்தாவின் புகாரில் காவல் துறை துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டுமா?

தில்லியில் காதலானால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஷ்ரத்தா வால்கர் கடந்த 2020ஆம் ஆண்டு கொடுத்த புகாரினை காவல் துறை இன்னும் அதிக கவனம் கொடுத்து விசாரித்திருக்க வேண்டுமென மகாராஷ்டிர முன்னாள் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கால் சென்டர் ஊழியராக இருந்த ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா, அவரை கொலை செய்து 35 துண்டுகளாக்கி, தில்லி முழுவதும் உடல் பாகங்களை வீசியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஷ்ரத்தா வால்கர் மும்பை காவல் நிலையத்தில் அஃப்தாப் மீது அளித்துள்ள புகாரில் காவல் துறை துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஷ்ரத்தா வால்கர் கொடுத்த அந்த புகாரில், அஃப்தாப் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், அவர் என்னை துண்டு துண்டாக வெட்டி விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர முன்னாள் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஷ்ரத்தா வால்கர் புகார் கொடுத்த பிறகு காவல் துறை கவனம் கொடுத்து அவரது புகாரினை பதிவு செய்திருக்க வேண்டும். அவரது புகார் குறித்து காவல் துறையினர் அதிக கவனம் கொடுத்து விசாரித்திருக்க வேண்டும். இருப்பினும், காவல் துறை மீது நாம் அதிகமாக பழிசுமத்தி விடவும் முடியாது. ஏனென்றால், ஷ்ரத்தா தனது புகாரை திரும்பப் பெற்றுள்ளார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com